எருவில் முத்துமாரியம்மன் ஆலயத்தில் இன்றைய (09) தினம் காலை தீ மிதிப்பு பக்தி பூர்வமாக நடைபெற்றது.
கடந்த 20250.07.03ந் திகதி கதவு திறத்தலுடன் ஆரம்பமான 2025ம் ஆண்டுக்கான திருச்சடங்கானது பகல் பூசை, இரவு பூசை மற்றும் அரசடி வினாயகர் ஆலயத்தில் பால் வார்த்தல் நிகழ்வுகளுடன் கிராம பிரதட்சணை, மடிப்பிச்சை எடுத்தல் போன்ற நிகழ்வுகள் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்று முடிந்த நிலையில் இன்றைய தினம் தீ மிதி;ப்பு காலை 07.30 மணியளவில் நடைபெற்றது.
இதன் போது அடியவர்கள் கடந்த காலத்தில் தாங்கள் அம்மாளிடம்; நேர்த்தி வைத்து பிரார்த்தனை செய்த காரியங்கள் நிறைவேறியதனால் அம்பாளை பிரார்த்தித்து தீயில் இறங்கி தங்களது நேர்த்தி கடனை நிறைவு செய்யதமையும் குறிப்பிடத்தக்கது அதிலும் குறிப்பாக பிள்ளை பாக்கியம் இல்லாது நீண்ட காலமாக பரிதவித்து வந்த சில குடும்பங்களுக்கு பிள்ளைபாக்கியம் கிடைக்கப்பெற்றதனை முன்னிட்டு மிகவும் மன மகிழ்வுடன் தங்களது நேர்த்தியினை நிறைவு செய்து தீமிதித்தமையம் குறிப்பிடத்தக்கது.
மேலும் பல அடியவர்கள் பல குறைகளை வேண்டியும் நோய் நொடி தீர வேண்டியும் பிரார்த்தனை செய்தமையின் பொருட்டு தங்களது நேர்த்தியினை நிறைவு செய்யதமையும் குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து இன்றைய தினம் மாலை வட்டுக்குத்து பூசையுடன் நல்லிரவு விநாயகர் பானை எழுந்தரவு செய்து நாளை அதிகாலை திருக்குளிர்த்தி பூசையுடன் 2025ம் ஆண்டுக்கான திருச்சடங்கு நிறைவடையவுள்ளதாக ஆலய பரிபாலன சபைத்தலைவர் ஓய்வு நிலை அதிபர் சா.பரமானந்தம் கருத்துரைத்தமையும் குறிப்பிடத்தக்கது.







