( வாஸ் கூஞ்ஞ) 08.07.2025
மன்னார் கல்வி வலய மட்டத்திலான மாணவர் பாராளுமன்ற நிகழ்வு கடந்த திங்கட்கிழமை பிற்பகல் 2 மணியளவில் மன்னார் வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.கு. செல்வன் அவர்கள் தலைமையில் மன்னார் கல்வி வலயத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வுக்கு .மன்னார் மாவட்ட செயலாளர் திரு.கே. கனகேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மன்னார் கோட்டக்கல்வி அதிகாரி திரு. பி ..சந்தியோகு. முசலிக்கோட்ட முன்னாள் கல்வி அதிகாரி திருஇஉவைஸ்..நானாட்டான் கோட்ட முன்னாள் கல்வி அதிகாரி திரு.ஐ.ஜெகநாதன் மற்றும் மன்னார் சமூக பொருளாதார அமைப்பின் இயக்குனர்இ திரு. ஜாட்சன் பிகுறாடோ..மன்னார் பிரதேச செயலக திறன் அபிவிருத்தி அலுவலர் திரு. நியூமன்.பீரிஸ் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.


