கிண்ணியா நகர சபையின் தவிசாளர் மற்றும் செயலாளர் மாகாண முதலமைச்சு செயலாளருடனான சந்திப்பு

கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எம்.எம். மஹ்தி செயலாளர் சகிதம் கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் இஸட்.ஏ.எம். பைஸல் அவர்களை அவரது அலுவலகதில் (04) வைத்து சந்தித்தார்.

இச்சந்தியின் போது கிண்ணியா நகர சபையில் காணப்படுகின்ற ஆளணி பற்றாக்குறை, வளப்பற்றாக்குறை, வருமான இழப்புகள், சுற்றுலா துறையை மேம்டுத்துதல், நவீன சந்தை கட்டிட தொகுதி நிர்மாணம் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டன.