காத்தான்குடி சிறுதொழில் முயற்சி விற்பனைக் கண்காட்சி!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

காத்தான்குடி பிரதேச செயலக சிறு தொழில் முயற்சி தொழில் அபிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில், உள்ளூர் சிறு தொழில் முயற்சியாளர்களின் விற்பனைக் கண்காட்சி நேற்று (30) திங்கட்கிழமை நடைபெற்றது.

காத்தான்குடி பிரதேச செயலகம் முன்பாக விற்பனைக் கூடாரங்கள் அமைக்கப்பட்டு, சிறு தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு, பொதுமக்கள் கொள்வனவு செய்யும் வகையிலும் , முயற்சியாளர்களுக்கு விற்பனைக்கான சந்தர்ப்பமும் வழங்கப்பட்டது.

இந்த விற்பனைக் கண்காட்சியை, காத்தான்குடி பிரதேச செயலாளர் நிஹாரா மௌஜூத் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நாடா வெட்டி திறந்து வைத்தார்.

இதன்போது காத்தான்குடி பிரதேச செயலக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.