நூருல் ஹுதா உமர்
அம்பாறை மாவட்டத்திலுள்ள 32 முன்னணி அணிகள் கலந்து கொண்ட டைட்டன்ஸ் சீசன் – 6 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி 29.06.2025 அன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.
இப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு சம்மாந்துறை டைட்டன்ஸ் அணி மற்றும் அக்கரைப்பற்று டீன்ஸ் ஸ்டார் அணிகள் மோதிக் கொண்டனர், இப்போட்டியில் சம்மாந்துறை டைட்டன்ஸ் அணி விறுவிறுப்பான போராட்டத்தில் வெற்றி பெற்று, வெற்றி கிண்ணத்தையும் பணப்பரிசையும் கைப்பற்றியது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இளைஞர் அமைப்பாளர் மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் அமீர் அப்னான் அவர்கள் கலந்து கொண்டு, வெற்றி கிண்ணத்தையும் பணப் பரிசுகளையும் வழங்கி கெளரவித்தார். அத்தோடு, Turney Biscuits Company இன் அம்பாறை மாவட்ட விநியோகிஸ்தர் எல்.எம் அஸ்லம் விசேட அதிதியாக கலந்து கொண்டார்.
விளையாட்டையும், ஒற்றுமையையும் முன்னிறுத்தி போதையில்லா சமூகம் உருவாகும் இத்தகைய நிகழ்வுகள் தொடரட்டும்.


