தம்பலகாமத்தில் சதுப்புநிலத்தில் சிக்கிய நான்கு வயது யானைக்குட்டி மீட்பு!

எப்.முபாரக்

திருகோணமலை மாவட்டதௌதின், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரவிபாஞ்சான் குளத்திற்கு அருகாமையிலுள்ள சதுப்புநிலப் பகுதியில், சுமார் நான்கு வயதுடைய யானைக்குட்டி ஒன்று (29) மீட்கப்பட்டதாக கந்தளாய் வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பகுதியில் மீன் பிடிக்கச் சென்ற ஒருவர், சதுப்புநிலத்தில் சிக்கிக்கொண்டு தவித்துக்கொண்டிருந்த யானைக்குட்டியை கண்டு உடனடியாக கந்தளாய் வனஜீவராசி அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, வனத்துறையினர் விரைந்து சம்பவ இடத்துக்கு வந்துள்ளனர். பின்னர், யானைக்குட்டி பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும், அதற்கு தேவையான மருத்துவ பராமரிப்பு வழங்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிகழ்வு, வனவிலங்குகள் மனிதர்கள் வாழும் பகுதிக்கு அருகே வருகின்றதற்கான பசுமை நிலப்பகுதி குறைபாடு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளின் அவசியத்தை மீண்டும் வலியுறுத்துகிறது.