எப்.முபாரக்
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்தின் சாரதி மதுபோதையில் இருந்தமையால் தம்பலகாமம் பொலிஸாரால் (28) கைது செய்யப்பட்டுள்ளார்.
பதுளையிலிருந்து நிலாவெளிக்கு சுற்றுலா சென்ற மாணவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
நிலாவெளியில் தமது சுற்றுலாவை முடித்துக்கொண்டு பதுளை நோக்கித் திரும்பிக்கொண்டிருந்த குறித்த பேருந்தில் ஐம்பது மாணவர்களும் ஆசிரியர்களும் பயணித்துள்ளனர்.
தம்பலகாமம் வீதிப் பாதுகாப்புப் பொலிஸார் சாரதியை வழிமறித்துச் சோதனையிட்டபோது, அவர் மதுபோதையில் இருந்தமை உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, மாணவர்களின் பாதுகாப்பைக் கருதி சாரதி உடனடியாகக் கைது செய்யப்பட்டார்.
தற்போது மாணவர்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.


