எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
ஆரம்ப பிரிவு மாணவர்கள் மற்றும் நாடக கலைஞர்களுக்கு தேவையான பயனுள்ள பறவைகள், ஏனைய வடிவங்களிலுமான முகமூடி வடிவங்களை செய்வதற்கான பயிற்சி நிகழ்வு வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (24) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
இந்நிகழ்வில் குறித்த பயிற்சிக்கான வளவாளராக ‘தமிழ்நாடு தஞ்சாவூர் பல்கலைக்கழக நாடகத் துறையின் உதவி பேராசிரியர் ஆதி வெங்கடேசன் சிறப்பித்ததுடன்
செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் ஜுமானா ஹஸீன், கலாசார உத்தியோகத்தர் எம். எச. எம்.நியாஸ், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.திலீபா, முன் பிள்ளைப் பருவ உத்தியோகத்தர் எம்.சர்ஜுன் ஆகியோரும் மற்றும்
இப் பயிற்சி நெறியில் முன்பள்ளி ஆசிரியர்கள், கலைமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
குறித்த பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டவர்கள் தமது முயற்சி மற்றும் திறமைகளால் வெவ்வேறு வடிவங்களில் நாடக முகமூடிகளை குறிப்பிட்ட நேரத்திற்குள் தயாரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


