எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
இலங்கை சின்ஹா படைப்பிரிவின் 11வது பட்டாலியன் இராணுவத்தினரால் வறிய குடும்பங்களைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு (23) கொக்கட்டிச்சோலை கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வு இலங்கை 11வது பட்டாலியனின் கட்டளைத் அதிகாரி மேஜர் ரனில் பலகல்லா தலைமையிலான இராணுவ குழாம் முன்னெடுத்துடன், கல்லடி 243வது இராணுவ கட்டளை தளபதி பிரிகேடியர் பிரதீப் கலுபஹான பிரதம அதிதியாகவும், பட்டிப்பளை பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் மற்றும் பட்டிப்பளை வைத்திய அதிகாரி டாக்டர் கே.ரமேஷ் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
மகிழடித்தீவு பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 20 வறிய குடும்பங்களைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்கள் ஒவ்வொருவருக்குமாக ரூ.10,000 பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.
இந் நிகழ்வில் பட்டிப்பளை சுகாதார அதிகாரி அலுவலக பொதுச் சுகாதார பரிசோதகர்கள், தாதி உத்தியோகத்தர்கள், கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள், கிராம உத்தியோகத்தர்கள், பயனாளிகள் என கலந்து கொண்டிருந்தனர்.


