சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் “அன்னையர் ஆதரவு குழு கூட்டம்”

நூருல் ஹுதா உமர்

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட 9 அன்னையர் ஆதரவுக் குழுக்களின் ஒன்றுகூடல் சாய்ந்தமருது ஏ.பி.சி. நிலையத்தில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் அனுசரணையில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அன்னையர் ஆதரவு குழு உறுப்பினர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக சுயதொழில்களை ஊக்குவிப்பதற்கான வழிகாட்டல்கள் வழங்கப்பட்டது. இதில் 90 அன்னையர் ஆதரவுக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை தாய் சேய் நலப் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.றிஸ்பின், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் மேற்பார்வை தாதிய சகோதரி கே.சௌந்தரராஜன், பொதுச் சுகாதார தாதிய சகோதரி ஜீ.எச்.எஸ்.ஜீ.கமகே, மேற்பார்வை பொது சுகாதார மருத்துவ மாது டி. ராஜேஸ்வரி, சுகாதார கல்வி மேம்பாட்டு உத்தியோகத்தர்கள் எம்.ஜெ.எம்.பைறூஸ், பொது சுகாதார மருத்துவ மாதுக்கள் மற்றும் அன்னையர் ஆதரவுக் குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.