ஏத்தாளையில் விபத்து ஒருவர் பலி இருவர் காயம்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி – பாலாவி வீதியில் ஏத்தாளை பிரதேசத்தில் பாலவியில் இருந்து கற்பிட்டி நோக்கிய பயணித்த லொறியொன்று அதே திசையில் பயணித்த முச்சக்கரவண்டியை முந்திச் செல்ல முற்பட்ட வேளையில், எதிர் திசையில் இருந்து வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி இரு வாகனங்களும் வீதியில் கவிழ்ந்து விபத்துள்ளாகின.

விபத்தில் ஆட்டோ ஓட்டுநரும் லொறியின் சாரதியும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் மரணித்தவர் 38 வயதுடைய தலவில பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

சடலம் கற்பிட்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.