ஈரானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஈரானில் வசிக்கும் இலங்கையர்கள் வெளியேற விரும்பினால், அவர்களுக்கு விமானப் பயணங்களை எளிதாக்க இலங்கை அரசாங்கம் இந்திய அரசாங்கத்துடன் இணைந்து செயற்படவுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஈரானில் இருந்து வெளியேற விரும்பும் எந்தவொரு இலங்கையரும் டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகத்தை டெலிகிராம் சேனல் அல்லது பின்வரும் அவசர எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம்.


