லொறியுடன் மோதி விபத்திற்குள்ளான மோட்டார் சைக்கிள்!

கம்பளை, நிதாஸ் மாவத்தை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் லொறி ஒன்றுடன் மோதி விபத்துள்ளாகியுள்ளது.

குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் காயம் அடைந்த நிலையில் கம்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணை கம்பளை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.