குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு நேற்று மதியம் புறப்பட்ட ஏர் இந்தியா AI-171 போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் கிளம்பிய சில நிமிடங்களில் விடுதி மீது விழுந்து விபத்துக்குள்ளானதில் 241 பேர் கொல்லப்பட்டனர்.
இறந்தவர்களில் இரண்டு பிரிட்டிஷ் இளைஞர்கள் கடைசியாக எடுத்த வீடியோ மனதை உடைப்பதாக உள்ளது.
லண்டனைச் சேர்ந்த யோகா ஆர்வலர் ஜேமி மீக் மற்றும் ஃபியோங்கல் கிரீன்லா-மீக் ஆகிய இருவர் AI-171 விமானம் மூலம் லண்டனுக்குச் செல்வதற்கு முன் வெளியிட்ட கடைசி இன்ஸ்டாகிராம் பதிவு இது.
விமான நிலையத்தில் வைத்து எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், இருவரும் ‘ குட்-பை இந்தியா’ என்று கையசைப்பதையும், இங்கு விடுமுறையில் கழித்த மகிழ்ச்சியான நேரத்தை நினைவு கூர்வதையும் காணலாம்.
Shortly before the fatal crash of Air India flight AI171 in Ahmedabad, two British nationals waiting to board the plane were seen joking and smiling in what would become their final video.
In a story posted to their wellness page, Wellness Foundry, founders Jamie Ray Meek and… pic.twitter.com/XRSKFid3BF
— Breaking Aviation News & Videos (@aviationbrk) June 12, 2025


