மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினை குறைத்தல் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினை குறைத்தல் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடலானது மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் புதிய மாவட்ட செயலதத்தில் இன்று (09) இடம் பெற்றது.

காலநிலை மாற்றத்தினால் அதிகளவு வெள்ள அனர்த்த பாதிப்பை எதிர்கொள்ளும் மாவட்டமாக எமது மாவட்டம் காணப்படுகின்றது.

அனர்த்த பாதிப்பிலிருந்து இவ் பிரதேசத்தை பாதுகாப்பதற்கு UN Habitat நிறுவனத்தின் நிதி அனுசரனையின் கீழ் எதிர்வரும் காலங்களில் மாவட்டத்தில் பல வேலை திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதனை முன்னிட்டு விவசாய அமைப்பினர் வெள்ள பாதிப்பை குறைப்பதற்கான தமது கருத்துக்களை அரசாங்க அதிபரிடம் தெரிவித்தனர்.

இக் கலந்துரையாடலின் போது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்ஷினி ஸ்ரீகாந்த், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் வீ.நவநீதன், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாத், விவசாய அமைப்பினர் கலந்து கொண்டனர்.