புத்த சாசன மத மற்றும் கலாச்சார அமைச்சர் ஹினிதும சுனில் செனவி அவர்களுடனான சந்திப்பு இன்று கலாச்சார அமைச்சில் இடம்பெற்றது. இதன் போது கொழும்பு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலய தர்மகர்த்தா சபையினர் சார்பாக கனக ராகுநாதன் மற்றும் வீரசுப்பிரமணியம் ஆனந்த ரூபன் ஆகியோருடன் சர்வதேச இந்து மத பீடச் செயலாளர் கலாநிதி சிவ ஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் மற்றும் பீட இணைப்பாளர் சிவனேசன் சர்மா ஆகியோருடன் மத நல்லிணக்கம் மூலம் நாட்டை கட்டி எழுப்புவது பற்றியும் மேலும் கதிர்வேலாயுத சுவாமி ஆலய கும்பாபிஷேகம் தொடர்பான கலந்துரையாடல்களையும் மேற்கொண்டு அமைச்சருக்கு பாபு சர்மா பொன்னாடை போர்த்தி சபையினர் சார்பாக பழத்தட்டும் பிரசாதமாக வழங்கப்பட்டது .


