உறுதிப்பூசுதல் என்னும் திருவருட்சாதனத்தை 71 இளைஞர் யுவதிகள் பெற்றனர்.

( வாஸ் கூஞ்ஞ) 07.06.2025

கத்தோலிக்க இறை மக்களுக்கு வழங்கப்படும் திருவருட்சாதங்களில் ஒன்றான உறுதிப்பூசுதல் என்னும் திருவருட்சாதனம் மன்னார் மறைமாவட்டத்தில் பேசாலை புனித வெற்றிநாயகி ஆலய பங்கில் 71 இளைஞர் , யுவதிகளுக்கு பேசாலை பங்குத் தந்தை அருட்பணி எஸ்.சத்தியராஜ் அடிகளார் ஏற்பாட்டில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகையினால் வழங்கப்பட்டது.

சனிக்கிழமை (07.06) நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆயரின் தலைமையில் நடைபெற்ற கூட்டுத்திருப்பலியில் குருமுதல்வர் தமிழ் நேசன் அடிகளார் , மறைமாவட்ட ஆயர் இல்ல நிதி பொறுப்பாளர் அருட்பணி சுரேந்திரன் றெவல் அடிகளார் , பங்கு தந்தை உட்பட மேலும் அருட்பணியாளர்கள் கலந்து கூட்டுத்திருப்பலி ஒப்புக் கொடுத்தனர்.

அத்துடன் மன்னார் ஆயர் மேதகு அ.ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்கள் முன்னாள் பேசாலை பங்குத் தந்தையாக இருந்ததுடன் , ஆயராக திருநிலைப்படுத்தப்பட்ட பின் முதன் முறையாக பேசாலைக்கு வருகை தந்ததை முன்னிட்டும் அவருக்கு பேசாலை சமூகம் அமோக வரவேற்பு நிகழ்வையும் வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது