ஹஸ்பர் ஏ.எச்_
புனித ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாள் தினமான இன்று (07) திருகோணமலை மாவட்ட முள்ளிப்பொத்தானை ஈச்ச நகர் பொது விளையாட்டு மைதானத்திலும் திடல் தொழுகை இடம் பெற்றன.
குறித்த திடல் தொழுகையை புஹாரி ஜூம் ஆ பள்ளிவாயல்,ஈச் விளையாட்டு கழகம்,புஹாரி ஜனாசா நலன்புரி சங்கம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். குத்பா பிரசங்கத்தை மௌலவி முர்ஷித் நிகழ்த்தினார்.
இதில் ஆண் பெண்கள் சிறுவர்கள் என பெரும்பாலனவர்கள் கலந்து கொண்டதுடன் ஹஜ் பெரு நாள் வாழ்த்துக்களையும் ஒருவருக்கொருவர் கைலாகு கொடுத்து பகிர்ந்து கொண்டனர்
இதன் மூலம் சகோதரத்துவம்,ஒற்றுமை போன்றனவும் இந் நாளில் வளர்க்கப்படுகிறது.


