மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் உலக சுற்றாடல் தின நிகழ்வு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் உலக சுற்றாடல் தின நிகழ்வானது மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் சர்வோதயா மண்டபத்தில் இன்று (05) திகதி இடம் பெற்றது.

உலக சுற்றாடல் தினமானது நாடலாவிய ரீதியில் இடம் பெற்று வரும் நிலையில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டிலும் சமுர்த்தி திணைக்களத்தின் நிதி அனுசரனையில் இடம் பெற்றது.

“பிளாஸ்டிக் மாசாக்கத்தை முடிவுக்கு கொண்டு வருதல்” எனும் தொனிப்பொருளில் இவ் வருட சுற்றாடல் தின நிகழ்வுகள் இடம் பெற்றுவருகின்றது.

இதன் போது கருத்து தெரிவித்த பிரதேச செயலாளர் நெகிழி பாவனையை குறைப்பதற்கு தனிமனிதனின் மாற்றத்திலேயே தங்கியுள்ளதுடன் சிறந்த சுற்றுச் சூழலை எமது எதிர்கால சந்ததியினருக்கு வழங்க வேண்டியது அனைவரினதும் கடமையும் பொறுப்பும் என்றார்.

சுற்றாடல் தினத்தை முன்னிட்டு கண்டல் தாவரம் நடல் , நீர் மூலாதாரங்களை பாதுகாத்தல், தூய்மைப்படுத்தல், அறநெறி பாடசாலை மாணவர்களை விழிப்புணர்வூட்டல் மற்றும் இவ்வாறான செயற்திட்டங்களை ஒரு வாரகாலமாக பிரதேச செயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இந் நிகழ்வை முன்னிட்டு மரநடுகை நிகழ்வுகள், விழிப்புணர்வு காணொளிகள் காட்சிப்படுத்தல், கதிரவன் கலைக்கழகத்தின் சிறப்பு பேச்சு, மற்றும் சிறார்களின் கண்கவர் விழிப்பூட்டும் நடனங்கள் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர்களான திருமதி லக்சன்யா பிரசந்தன், திருமதி சுபாசதாகரன், சமுர்த்தி தலைமைக்காரிய முகாமையாளார்கள், உயர் அதிகாரிகள், கிராம நிர்வாக உத்தியோகத்தர், மற்றும் உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்