தேசிய சுற்றாடல் தின நிகழ்ச்சித்திட்டம் – 2025

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தினால் பிரதேச செயலாளர் உ. உதய ஸ்ரீதரின் வழிகாட்டுதலில் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்டது.

“கடற்கரையோர சுத்தப்படுத்துகை தினம் ” எனும் தொனிப் பெரிய கல்லாறு தொடக்கம் குருக்கள்மடம் வரையான 30 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் கடற்கரையோர சுத்தப்படுத்துகை நிகழ்வு இன்று (2025.06.04) காலை 07.30 மணி முதல் இடம்பெற்றது.

பிரதேச செயலக வெளிக்கள, கிராம சேவை மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் – திட்டமிடல், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி பயனாளிகளின் பங்குபற்றுதலுடன் கடற்கரை கரையோர மற்றும் சவுக்கு மர பிரதேசங்கள் இதன்போது சுத்தம் செய்யப்பட்டன.

” பிளாஸ்திக் மாசாக்கத்தை முடிவுக்கு கொண்டு வருதல் Ending plastic pollution” எனும் தொனிப்பொருளை மையமாக கொண்ட சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மே 30 – ஜூன் 5 வரை பிரதேச செயலாளர் உ. உதயஸ்ரீதர் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலில் பல நிகழ்ச்சித் திட்டங்கள் பிரதேச செயலக பிரிவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.