ஹஸ்பர் ஏ.எச்_
திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தினால் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற மேலும் இரு குடும்பங்களுக்கு நிரந்தர வீடு நிர்மாணிப்புக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு நேற்று மன்றத்தின் தலைவர் எம். ரீ. எம். பாரிஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தினால் வறுமை கோட்டின் கீழ் வாழுகின்ற நிரந்தர வீடுகள் அற்ற குடும்பங்களுக்கு பாதுகாப்பானதும் நிலையுறுதியுமான நிரந்தர வீடுகளை நிர்மாணிக்கும் வாழ்வதற்கான தங்குமிடம் எனும் திட்டத்தின் கீழ் மேற்படி இரு வீடுகளும் நிர்மாணிக்கப்படவுள்ளது. இந்த வீட்டுத்திட்டத்திற்கு அவுஸ்ரேலியாவில் வசித்து வரும் பிரபல சமூக ஆர்வளர் திரு. குணரத்ணம் கந்தக்குமார் மற்றும் திருமதி பிரமிளா ஆனந்தகுமார் ஆகிய இருவரும் நிதி அனுசரணை வழங்கினர். குறித்த இரு வீடுகளும் திருகோணமலை பட்டிணமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள சல்லிக் கிராமத்திலும் விளாங்குளக் கிராமத்திலும் நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


