மாவட்டத்தில் ஆடை ஏற்றுமதி தொழில் பேட்டைகளை அமைத்தல் தொடர்பான உயர் மட்ட கலந்துரையாடல்!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்றுமதி ஆடை உற்பத்தி தொழில் பேட்டைகளை துரிதமாக அமைப்பதற்கான உயர் மட்ட கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் பங்குபற்றுதலுடன் புண்னக்குடா கைத்தொழில் பூங்காவில் நிறுவப்பட்டுவரும் ஆடைத் தொழிற்சாலையின் நிருவாக கட்டடத்தில் நேற்று மாலை (02) திகதி இடம் பெற்றது.

மாவட்டத்தில் ஆடை உற்பத்தி தொழிற்சாலைகளை அமைத்து. இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்குவதற்கான உயர் மட்ட கலந்துரையாடலே மேற்கொள்ளப்பட்டது.

மேலும் அமைக்கப்பட்டுவரும் தொழில் பேட்டைக்கு தேவையான மின்சாரத்தை பெற்றுக்கொள்வதற்கான சோலார் பனல் அமைத்தல் தொடர்பாகவும், குடிநீர் வழங்கள் தொடர்பாகவும் இதன் போது துறைசார் நிபுணர்களுடன் கலந்துரையாடப்பட்டது.

மற்றும் நீர் முகாமைத்துவம், தொலைத்தொடர்பாடலை மேம்படுத்தல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

எமது நாட்டுக்கு அதிகலவலான அந்தியசெலவாணியை ஆடை உற்பத்தி மூலம் பெறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந் நிகழ்வில் ஜே.ஜே.மில்ஸ் குழுமத்தின் முகாமைத்து பணிப்பாளர் ஶ்ரீகுமார் பாலசூப்பிரமணியம், இலங்கை முதலீட்டுச் சபை யின் நிறைவேற்றுப்பணிப்பாளர் எம்.கே.டி லோரன்ஸ், மற்றும் சுகத் பரணவிதான, முதலீட்டாளர்கள்,
மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் வீ. நவநீதன், துறை சார் நிபுணர்கள் உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.