மட்டக்களப்பின் அபிவிருத்திக் குழுத் தலைவராக NPP அமைச்சரான மாத்தறையினை சேர்ந்த சுனில் ஹந்துநெத்தி..!

இன்றைய தினம் மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் போது. புதிய அபிவிருத்திக் குழுத் தலைவராக NPP அரசின் அமைச்சரான மாத்தறையினை சேர்ந்த சுனில் ஹந்துநெத்தி அவர்களின் பங்குபற்றலோடு இடம்பெற்றது. இவ் கூட்டத்தின் போது 2024 ஆம் ஆண்டளவில் போரதீவுப்பற்றில் என்னால் ஒதுக்கப்பட்ட 157 மில்லியன் ரூபாய்களை திறம்பட நிர்வகித்து வேலைத்திட்டங்களை சிறப்பாக செய்த அரச அதிகாரிகளுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்தேன். அத்துடன் ஓர் சில பிரதேச செயலகங்களில் சரியாக இவ் திட்டங்களை நடைமுறைப்படுத்தாதது மிகவும் கவலையளிக்கின்றது.