கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்)
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக்கிளை மற்றும் கரைத்தீவு ஜும்ஆ பள்ளி நிர்வாகமும் இணைந்து நடாத்திய மாபெரும் உழ்ஹிய்யா கருத்தரங்கு வெள்ளிக்கிழமை (30) இஷா தொழுகையை தொடர்ந்து கரைத்தீவு ஜும்ஆ பள்ளியில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் வளவாளராக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் தலைவர் அஷ்ஷெய்க் ஜிப்னாஸ் மிஸ்பாஹி கலந்து சிறப்பித்தார்.
இந்நிகழ்வுக்கு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் உறுப்பினர்களான அஷ்ஷெய்க் ஸல்மான் இஹ்ஸானி, அஷ்ஷெய்க் ரகீப் ரஷாதி, அஷ்ஷெய்க் ஹஸ்பான் ஸாபிதி மற்றும் அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் ரஷாதி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.


