(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
மதுரங்குளி பொலிஸ் பிரிவின் சமீரகம கோட்டன் தீவு பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக மதுரங்குளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீட்டில் உள்ள மின் ஆழியில் மின் சாதனத்தை பொருத்துவதற்கு முற்பட்ட போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது
மேலும் குறித்த சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை மதுரங்குளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


