திருகோணமலை கன்னியா தில்லை பத்ரகாளி அம்பாள் ஆலயத்தில் பிரதி வெள்ளிக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை தோறும் அருள்வாக்கு சுவாமி அம்பிக்கைதாசன் மற்றும் கிழக்கு மாகாண சர்வதேச இந்துமத பீடத்தின் இணைப்பாளர் அண்டனி அவர்களின் அருள்வாக்கு இடம்பெறுவது வழமையாகும்.
இதன் போது கடந்த வெள்ளிக்கிழமை அருள்வாக்கு நிகழும் போது அம்பாளின் திருவுருவத்தின் மீது நாக அம்மையார் (நாக பாம்பு )படம் எடுத்து பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்தது, அங்கு வந்த பக்தர்களினை பரவசப்படுத்தியது.
அருள்வாக்கு சுவாமி அண்டன் அவர்களின் வாக்கு பலருக்கு சித்தியாகி அவர்களது காரியம் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.


