திருக்கோவில் சுப்பர் ஸ்டார் விளையாட்டுக்கழகம் சம்பியனானது

வி.சுகிர்தகுமார்

திருக்கோவில் சுப்பர் ஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் 38ஆவது ஆண்டு நிறைவையொட்டி சுப்பர் ஸ்டார் விளையாட்டுக்கழக மைதானத்தில் இரவு பகல் ஆட்டமாக நடாத்தப்பட்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் திருக்கோவில் சுப்பர் ஸ்டார் விளையாட்டுக்கழகம் சம்பியனானது.
நேற்றிரவு (29) இறுதிப்போட்டியில் திருக்கோவில் சுப்பர் ஸ்டார் விளையாட்டுக்கழகம் மற்றும் விநாயகபுரம் மின்னொளி விளையாட்டுக்கழகங்கள் மோதிக்கொண்டன.
போட்டியின் இறுதிவரை எந்த அணியும் கோள்களை பெறாத நிலையில் தண்டனை உதைமூலம் திருக்கோவில் சுப்பர் ஸ்டார் விளையாட்டுக்கழகம் சம்பியனானது.
இறுதிப்போட்டி நிகழ்வில் திருக்கோவில் பிரதேச சபையின் எதிர்கால தவிசாளர் சுந்தரலிங்கம் சசிகுமார் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிக்கு சம்பியன் கிண்ணத்தை வழங்கி வைத்தார்.
இரண்டாவது இடத்தை பெற்ற விநாயகபுரம் மின்னொளி அணிக்கு பாராட்டுக்களை அவர் தெரிவித்துக்கொண்டார்