முனைப்பு நிறுவனத்தினால் வாழ்வாதார உதவி வழங்கிவைப்பு

*முனைப்பு நிறுவனத்தினால் வாழ்வாதார உதவி வழங்கிவைப்பு* முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத்தினால் வறுமைக்கோட்டின் கீழ் ஆரையம்பதி மேற்கு கிராம சேவகர் பிரிவில் வாழும் ஒரு குடும்பத்துக்கு வாழ்வாதார உதவி வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த குடும்பம் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்து வருவதனால் அவர்களது வாழ்வாதாரத்துக்கும் பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்துக்குமாக மீன் பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கான உதவியாக தோணி வழங்கிவைக்கப்பட்டது. முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத் தலைவர் மாணிக்கப்போடி சசிகுமார் தலைமையில் இடம்பெற்ற வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வில் முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் பொருளாளர் அ.தயானந்தரவி மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் நிஷாந்தி அருள்மொழி கிராம சேவை அதிகாரி க.பரிதிராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்