திருகோணமலையில் இடம்பெற்ற முதலாவது ஆசியக்கிண்ண யோகாசன போட்டி

( வடமலை ராஜ்குமார் )

சர்வதேச ஜக்கிய யோகாசன சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற முதலாவது ஆசியக்கிண்ண யோகாசன போட்டி ஞாயிற்றுக்கிழமை ( 25 ) திருகோணமலை மக்ஹெய்சர் விளையாட்டு அரங்கில் இடம் பெற்றது.

International Union Yoga Federation (IUYF) அமைப்பின் தலைமையில், WSS Sports International மற்றும் பல யோகா அமைப்புகளுடன் இணைந்து, 1வது IUYF ஆசிய யோகா சாம்பியன்ஷிப் 2025 திருகோணமலையில் சிறப்பாக நடைபெற்றது.

மொத்தம் 243 போட்டியாளர்கள் 5 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பல்வேறு பிரிவுகளில் பங்கேற்றனர். போட்டிகளுடன் கூடிய பாரம்பரிய கலாசார நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.

இந்நிகழ்வின் விருந்தினராக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஷன் அக்மீமன அவர்கள் பங்கேற்றார். WSS Sports International (இந்தியா) இயக்குநர் திரு. லிங்கம் பூபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்வின் தீம் போஸ்டரை வெளியிட்டார்.

நடுவராக திரு. பிரகாஷ், திரு. சுந்தரவேல், டாக்டர் சோந்தரி, திருமதி மீனாலட்சுமி மற்றும் திருமதி மரியமாலா ஆகியோர் செயல்பட்டனர். நிகழ்வுக்கு நிதியுதவியாக N2S Technology – India, GWR Global World Record, Kaleesuwari Foundation மற்றும் Ogam School of Yoga ஆகிய நிறுவனங்கள் பங்காற்றின.

இலங்கை IUYF தலைவர் திரு. ராம்கிஷன் மற்றும் IUYF மகளிர் பிரிவு தலைவர் திருமதி கௌரி சாந்தி நிகழ்வை ஒருங்கிணைத்தனர். விழா நிறைவில் திரு. லிங்கம் பூபதி நன்றி உரையாற்றினார்.